பெண்களைக் கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய GENG AKKA கும்பல் கைது!
- Thinagaren Sanggaren
- 23 Oct, 2025
அக்தோபர் 23,
பெண்களைக் கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கும்பலைச் சேர்ந்த ஐவர் தங்கள் மீதானக் குற்றத்தை மறுத்து விசாரணையைக் கோரினர். இன்று காலை கோலாலம்பூர் Sesyen நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்ட ஐவரும் கடந்த செப்டம்பர் 30 கோலாலம்பூரில் உள்ள தங்கும் விடுதியில் பாலியல் தொழில் நடத்தி வந்ததற்காகக் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட ஐவரில் ஒருவர் போலிஸ் அதிகாரி என முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. தங்கும் விடுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 7 இந்திய பெண்கள் மீட்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட ஐவரும் GENG AKKA எனும் உள்ளூர் பெண்ணின் தலைமையில் இயங்கும் கடத்தல் கும்பல் என கண்டறியப்பட்டுள்லது. கைது செய்யப்பட்டவர்களில் இருவர் உள்ளூர் ஆடவர்கள் என்றும் மற்றொருவர் காவல் அதிகாரிகள் என்றும் மேலும் இருவர் வெளிநாட்டினர் என்றும் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட ஐவரில் மூவருக்கு RM 10,000 முதல் RM 20,000 வரையில் ஜாமின் வழங்கிய நீதிமன்றம் மேலும் இருவருக்கு ஜாமினைத் தள்ளுபடி செய்து தடுப்புக் காவலை நீட்டித்தது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை நவம்பர் 17 மேற்கொள்ளப்படும் என கோலாலம்பூர் Sesyen நீதிமன்றம் உத்தரவிட்டது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



