கேபிள் திருட்டுக் கும்பலைச் சேர்ந்த 7 பேர் கைது!
- Thinagaren Sanggaren
- 14 Nov, 2025
நவம்பர் 14,
தலைநகரில் கேபிள் திருட்டில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த 7 உள்ளூர் ஆடவர்களைக் காவல்துறை கைது செய்திருப்பதாக Wangsa Maju மாவட்டக் காவல் ஆணையர் ACP Mohamad Lazim Ismail தெரிவித்தார். நேற்று அதிகாலை Setapak சாலையில் கேபிள்களைத் திருடும் முயற்சியில் ஈடுபட்ட கும்பலைக் காவல்துறை செய்ததை அடுத்து அவர்களை வழிநடத்தியதாக நம்பப்படும் அக்கும்பலின் தலைவனான 42 வயது உள்ளூர் ஆடவரையும் கைது செய்ததாக Wangsa Maju மாவட்டக் காவல் ஆணையர் ACP Mohamad Lazim Ismail தெரிவித்தார்.
அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள்களும் HILUX ரக வாகனங்களும் கேபிள் திருடுவதற்கான உபகரணங்களையும் பறிமுதல் செய்திருப்பதாக Wangsa Maju மாவட்டக் காவல் ஆணையர் ACP Mohamad Lazim Ismail தெரிவித்தார். கடந்த 1 வருடமாக இந்த கும்பல் தொடர்ந்து தலைநகரில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள கேபிள்களைத் திருடியதாக நம்பப்படுகிறது. இதுவரையில் சுமார் 300,000 ரிங்கிட் மதிப்பிலானக் கேபிள்களை அவர்கள் திருடியிருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக Wangsa Maju மாவட்டக் காவல் ஆணையர் ACP Mohamad Lazim Ismail தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



