‘கெங் ஹாடி’ கைது

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மே 22-

தலைநகர் கோலாலம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களைத் திருடி வந்த “கெங் ஹாடி” என அழைக்கப்படும் 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த வார இறுதியில் கெப்போங் பகுதியில் நடத்தப்பட்ட தனித்தனி சோதனை நடவடிக்கைகளில் இந்த கைது சம்பவம் இடம்பெற்றது.

செந்தூல் மாவட்ட துணை போலீஸ் தலைவர் Superintendan Jasni Zolpa கூறுகையில், 15 முதல் 33 வயதுக்குட்பட்ட இந்த கும்பல் கடந்த பிப்ரவரி மாதம் முதல் மோட்டார் சைக்கிள் திருட்டில் தீவிரமாக ஈடுபட்டு வந்ததாகத் தெரிவித்தார். திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் பின்னர் உதிரி பாகங்களாகப் பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

கும்பலின் தலைவராக கருதப்படும் 18 வயதான ஹாடி என்ற இளைஞர் வேலை இல்லாதவர் என்றும், திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்களை பிரித்து அதன் உடல் அமைப்புகளை ஆற்றில் வீசி சான்றுகளை அழித்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *