மோட்டார் சைக்கிள் திருடும் கும்பலின் நால்வர் கைது!
- Thinagaren Sanggaren
- 31 Dec, 2025
டிசம்பர் 31,
சிலாங்கூரில் தொடர் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டதாக நம்பப்படும் geng mizi கும்பலைச் சேர்ந்த நால்வருக்கு இன்று ஷா அலாம் Majistret நீதிமன்றம் 6 மாதங்கள் சிறையும் தலா 1,000 ரிங்கிட் அபராதமும் விதித்து மேல்விசாரணைக்கு உத்தரவிட்டது. கடந்த டிசம்பர் 9 முதல் 12 வரையில் சிலாங்கூர் காவல்துறையின் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் சந்தேகத்திற்குரிய நால்வரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள்களுக்கு முறையான ஆவணங்கள் இல்லாதது கண்டறியப்பட்டது, மோட்டார் சைக்கிளின் எஞ்சின் பதிவு எண்களைப் பரிசோதித்த காவல்துறையினர் 4 மோட்டார் சைக்கிள்களும் அக்தோபர் முதல் நவம்பர் மாதங்களில் காணாமல் போனதாகப் புகார் அளிக்கப்பட்டவை என கண்டறியப்பட்டதும் சம்மந்தப்பட்ட நால்வரின் வீட்டிலும் காவல்துறையினர் சோதனையை மேற்கொண்டனர்,.
சோதனையின் போது மோட்டார் சைக்கிள்களின் பாகங்கள் கண்டறியப்பட்டதாகவும் வீட்டிலிருந்து geng mizi கும்பலைச் சேர்ந்த பல பொருள்கள் கைப்பற்றதாகவும் சிலாங்கூர் காவல்துறையினர் சம்மந்தப்பட்ட நால்வரையும் கைது செய்தனர். 4 மோட்டார் சைக்கிள்களைத் திருடிய குற்றத்திற்கு 6 மாதங்கள் சிறையுடன் தலா 1,000 ரிங்கிட் அபராதம் விதித்த நீதிமன்றம், தொடர் திருட்டில் சம்மந்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் வழக்கின் விசாரணையை பிப்ரவரி 6 மேற்கொள்வதாகவும் 2 புதிய குற்றச்சாட்டுகளுக்குத் தலா RM4,200 ரிங்கிட் ஜாமின் வழங்குவதாகவும் Majistret நீதிமன்றம் உத்தரவிட்டது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



