GENG PRABA குண்டர் கும்பலின் மூவர் சொஸ்மாவில் கைது!
- Thinagaren Sanggaren
- 29 Jan, 2026
ஜனவரி 29,
சர்வதேசக் காவல்துறையால் தேடப்பட்டு வந்த மலேசியாவைச் சேர்ந்த GENG PRABA குண்டர் கும்பலுடன் தொடர்புடைய மூவர் மும்பையிலிருந்து நேற்று மலேசியாவுக்குக் கொண்டு வரப்பட்டிருந்த நிலையில் தற்போது தேசப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு செப்டம்பரில் தேசிய குற்றவியல் பாதுகாப்பு ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கையில் Selangor, Negeri Sembilan, Penang,Perak ஆகிய மாநிலங்களில் GENG PRABA குண்டர் கும்பலுடன் தொடர்புடைய 17 பேரை கைது செய்தனர்.
GENG PRABA குண்டர் கும்பலில் மொத்தம் 33 பேர் இருப்பதாகவும் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் கொலை, கொள்ளை, ஆகிய வன்முறைகளில் ஈடுபட்டதாகவும் நம்பப்படுகிறது. GENG PRABA குண்டர் கும்பலில் இதுவரை கைது செய்யப்பட்ட அனைவரும் 19 முதல் 44 வயதுக்குற்பட்டவர்கள் என தெரிய வந்துள்ளது. தற்போது இந்தியாவின் மும்பையில் கைது செய்யப்பட்ட இம்மூவரும் 30 வயதுடையவர்கள் என்றும் கடந்த அக்தோபர் மாதம் இம்மூவரும் மலேசியாவிலிருந்து வெளியேறி தாய்லாந்து, இங்லாந்து ஆகிய நாடுகளில் தலைமறைவாக இருந்ததாகவும் தற்போது இந்தியாவின் மும்பை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது அவர்களைக் காவல்துறை அடையாளம் கண்டு கைது செய்ததாகவும் தேசிய காவல்துறை தெரிவித்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



