இணைய மோசடியில் ஈடுபட்ட 43 பேர் கைது!

top-news
FREE WEBSITE AD

மே 21,

இணைய மோசடியில் ஈடுபட்டதாக நம்பப்படும் இரு கும்பலைச் சிலாங்கூரின் ஷா அலாமிலும் செப்பாங்கிலும் கைது செய்திருப்பதாகச் சிலாங்கூர் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Shazeli Kahar தெரிவித்தார். ஷா அலாமில் நடத்தபட்ட சோதனையில் 19 முதல் 41 வயதுள்ள 13 வெளிநாட்டினர்களுடன் உள்ளூர்வாசி ஒருவரும், செப்பாங்கில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 29 வெலிநாட்டினர்களையும் கைது செய்துள்ளதாக சிலாங்கூர் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Shazeli Kahar தெரிவித்தார்.

ஷா அலாமில் கைது செய்யப்பட்ட கும்பலிடமிருந்து 2 வாகனங்களையும் 20 கைப்பேசிகளுடன் 12 மடிக்கணினிகளையும் பறிமுதல் செய்திருப்பதாகவும் அதன் மதிப்பு சுமார் RM132,000 என கண்க்கிடப்பட்டுள்ளது. செப்பாங்கில் RM69,000 மதிப்புள்ள தொழில்நுட்பச் சாதனங்களைப் பறிமுதல் செய்திருப்பதாகவும் இரு சோதனைகளின் மூலமாக மொத்தம் RM201,000 மதிப்புள்ள பல்வேறு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் 42 வெளிநாட்டினர்களும் 1 உள்ளூர்வாசியும் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தெரிய வந்துள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *