குண்டர் கும்பலுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் ஆஜராகும் டி.ஏ.பியின் RSN RAYER?

top-news
FREE WEBSITE AD

டிசம்பர் 30,

பல்வேறுக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காக SOSMAவில் கைது செய்யப்பட்டிருக்கும் GENG RAMES எனும் குண்டர் கும்பலுக்கு ஆதரவாக ஜெலுதோங் நாடாளுமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான  RSN Rayer ஆஜராகியுள்ளார். இன்று காலை GENG RAMES எனும் குண்டர் கும்பலைச் சேர்ந்த 20 பேர் விசாரணைக்காக Sesyen நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, சொஸ்மாவில் கைது செய்யப்பட்டிருக்கும் 20 பேருக்கும் நீதிமன்றம் காலத் தாமதம் ஏற்படுத்தாமல் விரைந்து விசாரிக்க வேண்டும் என RSN Rayer தலைமையிலான வழக்கறிஞர் குழு கோரிக்கை வைத்தனர். 

கைது செய்யப்பட்ட 20 பேரும் தங்கள் குடும்பத்தினரைச் சந்திக்க நீதிமன்றம் அனுமதி வழங்க வேண்டும் என்றும் RSN Rayer கோரிக்கை வைத்தார். கோரிக்கையை ஏற்றுக்கொண்ட Sesyen நீதிமன்ற நீதிபதி கடுமையான பாதுகாப்புடன் கைது செய்யப்பட்டிருக்கும் 20 பேரும் அவர்களின் குடும்பத்தினரைச் சந்திக்க உத்தரவிட்டுள்ளது. மேலும் அடுத்தக்கட்ட நீதிமன்ற விசாரணை ஜனவரி 20 நடைபெறும் என Sesyen நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

GENG RAMES எனும் குண்டர் கும்பல் கெடா பினாங்கு ஆகிய மாநிலங்களில் கொலை, கொள்ளை, போதைப்பொருள் கடத்தல் என பல்வேறு குற்றங்களுக்காகக் கடந்த நவம்பர் 27 முதல் டிசம்பர் 4 வரையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். 24 முதல் 42 வயதுக்குற்பட்ட 20 பேரும் ரமேஷ் எனும் உள்ளூர் ஆடவரின் தலைமையிலான ஒரு குண்டர் கும்பலைச் சேர்ந்த 35 பேர்களில் சிலர் என்பதால் கடந்த 6 மாதமாகக் காவல்துறையின் சிறப்புப் படையினரால் கண்காணிக்கப்பட்ட கைது செய்யப்பட்டவர்கள்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *