32 திருட்டு வழக்கில் 2 இளம்பெண்கள் உட்பட 9 பேர் கைது!
- Thinagaren Sanggaren
- 23 Oct, 2025
அக்தோபர் 23,
ஜொகூரில் பல்வேறு திருட்டில் ஈடுபட்ட GENG RICHI குண்டர் கும்பலைச் சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை ஜொகூர் பாரு நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்ட 21 முதல் 37 வயதுள்ள 9 மலேசியர்களும் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட நிலையில் GENG RICHI குண்டர் கும்பலை வழிநடத்தியதாக நம்பப்படும் 21 வயது இளைஞரைக் காவல்துறை தேடி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் மீதான விசாரணையைக் காவல்துறை மேற்கொள்ளும்படி ஜொகூர் பாரு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
GENG RICHI குண்டர் கும்பல் இது வரையில் 32 திருட்டு வழக்குகளில் சம்மந்தப்பட்டுள்ளதாகவும் வீடு புகுந்து திருடுதல், கடைகளில் புகுந்து திருடுதல், சொகுசு வாகனங்களைத் திருடுதல் போன்ற பல்வேறு திருட்டுச் சம்பவங்களில் நேரடியாகத் தொடர்பில் இருந்ததாக 9 பேர் மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. ஜொகூரின் Johor Bahru, Seri Alam, Kulai, Pontian, Kluang, Batu Pahat ஆகிய பகுதிகளில் கடந்த 2022 முதல் திருட்டில் ஈடுபட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்கள் மீதான அடுத்த விசாரணை நவம்பர் 13 மேற்கொள்ளப்படும் என ஜொகூர் பாரு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



