21 ஆவது மாடியிலிருந்து விழுந்து 14 வயது சிறுமி பலி! - Georgetown பினாங்கு!

top-news
FREE WEBSITE AD

செப்டம்பர் 15,

பினாங்கில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் 21 ஆவது மாடியிலிருந்து விழுந்த இளம்பெண் 6 ஆவது மாடியின் கூரையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். நேற்று இரவு 8 மணிக்கு TIMUR LAUT காவல்நிலையத்திற்குப் பொதுமக்களிடமிருந்து அவசர அழைப்பைப் பெற்றதும் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக TIMUR LAUT மாவட்டக் காவல் ஆணையர் Abdul Rozak Muhammad தெரிவித்தார். Georgetown, Paya Terubong அடுக்குமாடிக் குடியிருப்பின் 6 ஆவது மாடியில் சிக்கியிருந்த பெண்ணின் சடலத்தை மீட்டதில் அவர் 14 வயது இளம்  பெண் என அடையாளம் காணப்பட்டிருப்பதாக TIMUR LAUT மாவட்டக் காவல் ஆணையர் Abdul Rozak Muhammad தெரிவித்தார்.

உயிரிழந்த 14 வயது இளம்பெண் தொடர்பான விவரங்கள் ஏதுமில்லாததால் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாகவும் பிரேதப் பரிசோதனைக்காக பினாங்கு அரசு மருத்துவமனைக்கு அவரின் உடல் கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் TIMUR LAUT மாவட்டக் காவல் ஆணையர் Abdul Rozak Muhammad தெரிவித்தார். உயிரிழந்த 14 வயது இளம் பெண் பட்டர்வெர்த்தைச் சேர்ந்தவர் என்றும் உறவினர் வீட்டில் தங்கியிருந்ததாகவும் அடுக்குமாடிக் குடியிருப்புவாசிகள் தெரிவித்த நிலையில் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக TIMUR LAUT மாவட்டக் காவல் ஆணையர் Abdul Rozak Muhammad தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *