PA Desa Rejang வணிகத்தலத்தில் 8 உணவுக் கடைகளை மூடிய DBKL!
- Sangeetha K Loganathan
- 10 Jul, 2025
ஜுலை 10,
தலைநகரின் பிரபல உணவு வணிக்கடைகளான PA Desa Rejang வணிகத்தலத்தில் செயல்பட்டு வந்த 8 உணவுக் கடைகளை மூடும்படி கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் உத்தரவிட்டுள்ளது. முறையாகப் பராமரிப்பற்ற நிலையில் சம்மந்தப்பட்ட உணவுக் கடைகள் செயல்பட்டு வருவதாகப் பொதுமக்களிடமிருந்து நேற்று புகாரைப் பெற்ற நிலையில் இன்று காலை சம்மந்தப்பட்ட PA Desa Rejang வணிகக் கடைகளில் சோதனை மேற்கொண்டதாகக் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் (DBKL) தெரிவித்தது.
PA Desa Rejang வணிகக் கடைகளில் செயல்பட்டு வந்த 22 உணவுக் கடைகளையும் சோதனையிட்டதில் தூய்மையற்ற நிலையில் முறையான சுகாதார உபகரணங்களைப் பயன்படுத்தாத 8 உணவுக் கடைகளை 14 நாள்கள் மூடும்படியும் மேல் சுகாதாரப் பரிசோதனையை மேற்கொள்ளும்படியும் சம்மந்தப்பட்ட உணவக உரிமையாளர்களுக்குக் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் (DBKL) உத்தரவிட்டதுடன் அபராதமும் விதித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
DBKL menutup lapan gerai makanan di PA Desa Rejang selama 14 hari selepas didapati beroperasi dalam keadaan kotor dan tanpa kelengkapan kebersihan yang betul. Tindakan diambil susulan aduan orang awam dan pemeriksaan ke atas 22 premis di kawasan tersebut.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



