GERIK சாலையில் 6 மாதங்களில் 257 விபத்துகள்! – 22 இறப்புகள்!
- Thinagaren Sanggaren
- 27 Jul, 2025
ஜூலை 27,
கிழக்கு மேற்கு நெடுஞ்சாலையான கெரிக்கிலிருந்து ஜெலி செல்லும் சாலையில் கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையில் 257 விபத்துகள் நிகழ்ந்துள்ளதாகக் கெரிக் மாவட்டக் காவல் ஆணையர் Abdul Samad Othman தெரிவித்தார். நெடுஞ்சாலையின் தரம் காரணமாகவும் வேகக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்காத வாகனமோட்டிகளுமே விபத்துகளுக்கான காரணம் என Abdul Samad Othman தெரிவித்தார். 257 விபத்துகளில் இதுவரையில் 22 பேர் உயிரிழந்திருப்பதாகவும் Abdul Samad Othman தெரிவித்தார். கடந்த ஜூன் 9 உப்சி மாணவர்கள் பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானது உட்பட சம்மந்தப்பட்ட சாலையில் வேகக் கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளதாக Abdul Samad Othman தெரிவித்தார்.
கிழக்கு
மேற்கு நெடுஞ்சாலையில் ஒரு நாளைக்கு 2,400க்கும் மேலான வாகனங்கள் கடப்பதாகவும் அதில் 751 கனரக
வாகனங்கள் என்பதால் பாதுகாப்புகள் குறித்து முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும்
சம்மந்தப்பட்ட சாலையின் மேம்பாடுகள் குறித்து பொதுப்பணித் துறையும் கவனத்திற்கொண்டிருப்பதாக
கெரிக் மாவட்டக் காவல் ஆணையர் Abdul Samad Othman தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



