கோம்பாக் சிவன் கோயில் உடைப்படும் அபாயம்! கோயில் நிர்வாகம் விளக்கம்!

top-news
FREE WEBSITE AD

பிப்ரவரி 27,

கோம்பாக்கிலிருந்து காராக் செல்லும் சாலையில் இயற்கை எழிலோடு அமைந்திருக்கும் புகழ்பெற்ற சிவன் கோயிலை நகராண்மைக் கழகம் முடக்கியிருப்பதாகவும் வழிபாட்டுக்கு உகந்த இடம் அது அல்ல என்றும் கோயில் நிலம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால் இந்த நடவடிக்கையை நகராண்மைக் கழகம் எடுத்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. ஆத்ம அருள் ஜோதி மூனிஸ்வரர் கோயில் நிர்வாகத்தின் கண்காணிப்பில் காராக் சிவன் கோயில் அமைந்திருக்கும் நிலையில் நகராண்மைக் கழகத்தின் நடவடிக்கைக்குப் பிறகு வனத்துறையுடனும் நகராண்மைக் கழகத்துடனும் கலந்துரையாடி வருவதாகக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முன்னதாகச் சிவராத்திரி விழாவின் போது நள்ளிரவில் கோயில் முழுவதும் பக்தர்கள் சூழ்ந்து சிவாராத்திரி வழிபாட்டை நடத்திய போது காட்டுக்குள் கோயில் அமைத்து வன விலங்குகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகச் சமூகவலைத்தலங்களில் ஒரு சிலர் கருத்துகளைப் பரப்பியது கோயில்களுக்கு எதிராகச் செயல்படும் TANAH MALAYA எனும் சமூகவலைத்தலத்தில் கோம்பாக் சிவன் கோயில் அரசாங்கத்தால் பாதுகாக்கப்படும் வனப்பகுதியாகக் கருதப்படும் பகுதியில் அமைந்திருப்பதாகவும் அது குறித்து நகராண்மைக் கழகத்தில் புகார் அளிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

தற்போது சிவன் கோயிலுக்குள் நுழைய கோயில் நிர்வாகத்தினர் உட்பட பொதுமக்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சமய விழாக்களில் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் அந்த கோயிலைக் கண்டு சிலாகிப்பர். இயற்கை எழிலோடு, நீருற்றுக்கு இடைதில் அமைந்திருக்கும் சிவலிங்கத்தைக் காணவும் பலரும் அந்த கோயிலுக்குச் சாதாரண நாளிலும் திரள்வார்கள். அப்படியான ஒரு கோயிலுக்கு ஏற்பட்டிருக்கும் நிலப் பிரச்சனையைக் கோயில் நிர்வாகம் அரசுத் தரப்புடன் சுமூகமானப் பேச்சுவார்த்தைகளின் மூலமாகத் தீர்வுக் காணும் என ஆத்ம அருள் ஜோதி மூனிஸ்வரர் கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *