‘வந்தே மாதரம்’ பாடலை அவமதித்தால் தண்டனை: புதிய மசோதாவை கொண்டுவர மத்திய அரசு திட்டம்

top-news
FREE WEBSITE AD

புதுடெல்லி, ஜூலை 17-

இந்தியாவின் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலை வேண்டுமென்றே அவமதிப்பது அல்லது பாடுவதைத் தடுப்பதைத் தண்டனைக்குரிய குற்றமாக்கும் புதிய மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

‘தேசிய மரியாதையை அவமதிப்பதைத் தடுக்கும் சட்டத் திருத்த மசோதா–2026’ என்ற பெயரிலான இந்த மசோதா, ஜூலை 20ஆம் தேதி தொடங்கவுள்ள நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு, விவாதம் மற்றும் நிறைவேற்றத்திற்காக எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக மக்களவைச் செயலகம் தெரிவித்துள்ளது.

தற்போதுள்ள 1971ஆம் ஆண்டு தேசிய மரியாதை அவமதிப்புத் தடுப்புச் சட்டத்தில், தேசிய கீதம் பாடப்படுவதை வேண்டுமென்றே தடுப்பது அல்லது அதில் இடையூறு ஏற்படுத்துவது குற்றமாகும். இதற்கு அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். இதே சட்டப் பாதுகாப்பை ‘வந்தே மாதரம்’ பாடலுக்கும் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *