மின்னணு விலைப்பட்டியல் முறை,வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான கட்டாய 2% EPF மறுபரீசலனை
- Surendran Sumdraraj
- 09 Jul, 2026
கோலாம்பூர், ஜூலை 9:
மின்னணு விலைப்பட்டியல் முறை மற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான கட்டாய 2% EPF ஆகியவற்றை மறுபரிசீலனை செய்ய அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது என்று துணைப் பிரதமர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி நேற்று தெரிவித்தார்.
வணிக நிறுவனங்களிடையே உள்ள கவலைகளைத் தணிக்கும் வகையில், முன்னதாக நடைபெற்ற பாரிசான் நேஷனலின் முன்மொழிவுகளை அமைச்சரவைக் கூட்டம் ஏற்றுக்கொண்டதாக அவர் கூறினார்.
மின்னணு விலைப்பட்டியல் முறையைச் செயல்படுத்துவதால் வணிக நிறுவனங்கள் சுமையாக உணரக்கூடாது என்று அவர் கூறினார். ஜொகூர் தேர்தல் பிரச்சாரத்தின் போது அவர், இதனைத் தெரிவித்தார்.
மின்னணு விலைப்பட்டியல் முறை ஆகஸ்ட் 1, 2024 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஆண்டு ஏப்ரல் மாத நிலவரப்படி, மொத்தம் 225,604 வரி செலுத்துவோர் இந்த முறையை ஏற்றுக்கொண்டு, மொத்தம் 1.299 பில்லியன் மின்னணு விலைப்பட்டியல்களை வழங்கியுள்ளனர்.
தனித்தனியாக, வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்காக முதலாளிகள் 2% ஊழியர் சேமநிதிப் பங்களிப்பு செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை மறுபரிசீலனை செய்ய அமைச்சரவை ஒப்புக்கொண்டுள்ளதாக ஜாஹித் கூறினார்.
வரி விலக்கு அளிப்பதற்கான முந்தைய முடிவைச் செயல்படுத்த அமைச்சரவை ஒப்புக்கொண்டதாகவும், அதன்படி அந்த நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் தனது தணிக்கை செய்யப்பட்ட ஆண்டு கணக்குகளை நிதி அமைச்சகத்திடம் சமர்ப்பித்தால் மட்டும் போதுமானது என்றும் அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



