கிராண்ட் சுவிஸ் செஸ்: 8வது சுற்றில் வைஷாலி தோல்வி

top-news

சமர்கண்ட், செப். 14-

செய்தி-வெற்றி மைந்தன்

உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் நடைபெற்று வரும் பிடேகிராண்ட் சுவிஸ் செஸ் போட்டியில், 8ஆவது சுற்றில் இந்தியாவின் மகளிர் வீராங்கனை வைஷாலி தோல்வியைச் சந்தித்தார். 11 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியில், மகளிர் பிரிவில் 39ஆவது நகர்த்தலில் வைஷாலி, கஜகஸ்தானின் பிபிசாரா அஸ்ஸாபயேவாவிடம் தோல்வியடைந்தார்.

ஓபன் பிரிவில், இந்தியாவின் நிஹால் சரின், ஜெர்மனியின் மத்தியாஸ் புளூபாமுடன் 21ஆவது நகர்த்தலில் டிரா செய்தார். அதேபோல், அர்ஜுன் எரிகைசி, அர்மேனியாவின் சாந்த் சர்க்சியனுடன் 31வது நகர்த்தலில் டிராவைப் பதிவு செய்தார். தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, ஹங்கேரியின் ரிச்சர்ட் ராப்போர்ட்டுடனும், திவ்யா தேஷ்முக், இந்தியாவின் குகேஷுடனும் நடந்த ஆட்டங்கள் டிராவில் முடிந்தன.

மகளிர் பிரிவில், 3 சுற்றுகள் மீதமுள்ள நிலையில், ரஷியாவின் கேத்ரினோ லாக்னோ புள்ளிகளுடன் முதலிடத்திலும், வைஷாலி 6 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். இந்தப் போட்டி, உலக சாம்பியன்ஷிப் வேட்பாளர் தேர்வுக்கான முக்கியமான தகுதிச் சுற்றாகக் கருதப்படுகிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *