லண்டனில் டாய்ம் மனைவியின் சொத்துகள் முடக்கம்-உத்தரவில் திருத்தம் செய்ய எம்ஏசிசிக்கு அனுமதி!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 10-

முன்னாள் நிதியமைச்சர் டாய்ம் ஸைனுடினின் மனைவி நயீமா காலிட்டுக்கு லண்டனில் உள்ள 75.82கோடி வெள்ளி மதிப்புள்ள சொத்துகளை முடக்கம் செய்வதற்கு மலேசிய லஞ்சஊழல் ஒழிப்பு ஆணையம் (எம்ஏசிசி) உத்தரவு பிறப்பித்திருந்தது. அந்த உத்தரவில் திருத்தம் செய்யக் கோரி எம்ஏசிசி சமர்ப்பித்திருந்த விண்ணப்பத்தை உயர்நீதிமன்றம் நேற்று ஏற்றுக் கொண்டது.

எம்ஏசிசி சி பிறப்பித்திருந்த சொத்து முடக்க உத்தரவு போதுமான விவரங்களைக் கொண்டிராததால் அதனை பிரிட்டிஷ் அதிகாரிகள் நிராகரித்தனர். அதனைத் தொடர்ந்து, அதில் திருத்தம் செய்ய அனுமதி கோரி எம்ஏசிசி உயர்நீதிமன்றத்தில் விண்ணப்பம் ஒன்றைத் தாக்கல் செய்தது. துணை அரசு வழக்கறிஞர் (டிபிபி) மஸியா மொஹாய்டே தாக்கல் செய்த அந்த விண்ணப்பத்தை நீதிபதி அஸார் அப்துல் ஹமீட் நேற்று ஏற்றுக் கொண்டார்.

பிரிட்டிஷ் அதிகாரிகள் கேட்டுக் கொண்டபடி, சொத்து முடக்க விண்ணப்பத்தில் முழு முகவரிகள், சொத்துப் பட்டா விவரங்கள், சொத்துகளின் மதிப்பு போன்றவை புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன என்று மஸியா கூறினார்.

செயிண்ட் மேரி எக்ஸ் மற்றும் ஒன் கிரவுன் கோர்ட் ஆகிய இடங்களில் உள்ள இரண்டு வர்த்தகக் கட்டயங்கள், பிரையன்ஸ்டோன் ஸ்குவேர், பிரையன்ஸ்டோன் மியூஸ், லெங்கேஸ்டர் கேட் ஆகிய இடங்களில் உள்ள மூன்று ஆடம்பர வீடுகள் போன்றவை அச்சொத்துகளில் அடங்கும். டாய்முடன் தொடர்புடைய இல்ஹாம் ஃபவுண்டேஷன் நிறுவனத்திற்குக் சொந்தமான இதர சொத்துகளும் இவற்றில் உள்ளடங்கும்.

தங்கள் வசமுள்ள சொத்துகளை அறிவிக்கத் தவறியதற்காக காலஞ்சென்ற டாய்ம் மற்றும் நயீமா மீது எம்ஏசிசி வழக்குத் தொடர்ந்துள்ளது. டாய்ம் மரணமடைந்து விட்டாலும், வெளிநாடுகளில் அவருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் உள்ள சொத்துகளைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் எம்ஏசிசி ஈடுபட்டுள்ளது.

MAKAMAH Tinggi meluluskan permohonan SPRM untuk pindaan perintah pembekuan aset bernilai RM758.2 juta milik isteri bekas Menteri Kewangan, Daim Zainuddin, di London. SPRM membuat permohonan itu selepas butiran perintah asal ditolak oleh pihak berkuasa British kerana maklumat tidak lengkap.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *