மூலப் பொருள்களின் மீதான வரி விதிப்பு விலக்களிப்பைப் பரிசீலிக்க இணக்கம்!
- Muthu Kumar
- 27 Sep, 2025
கோலாலம்பூர், செப். 27-
செப்டம்பர் 26 (பெர்னாமா) - மலேசியா பரிந்துரைத்திருக்கும் செம்பனை எண்ணெய், கொக்கோ உள்ளிட்ட மூலப் பொருள்களின் மீதான வரி விதிப்பிற்கு விலக்களிப்பை அமெரிக்கா பரிசீலிக்க இணக்கம் தெரிவித்துள்ளது.
வரும் அக்டோபர் மாதத்தில், அவ்விவகாரம் இறுதி செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக அமெரிக்கா வரி விதிப்பின் அதிகாரப்பூர்வ பேச்சு வார்த்தைக்கான மலேசியாவின் தலைமை ஆலோசகர் மஸ்தூரா அஹ்மாட் முஸ்தாஃபா கூறினார்.
தளவாடங்கள், வாகன உபரிப் பாகங்கள், விண்வெளி உபரிப் பாகங்கள் ஆகியவற்றிற்குச் சுழியம் விகிதம் மதிப்பிடப்பட்ட வரி விதிப்பையும் அமெரிக்கா பரிசீலித்து வருவதாக அவர் தெரிவித்தார்."இப்பேச்சுகளில், அமெரிக்காவில் உற்பத்தி செய்ய முடியாத சில பொருட்கள் பரிசீலிக்கப்படலாம் என்று அமெரிக்கத் தரப்பு கூறியுள்ளது. இப்பொருட்களுக்கு. ஒருதலைபட்ச வரி கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கலாமா, அதாவது சுழியம் வரி விதிக்கலாமா என்பதை அவர்கள் பரிசீலிப்பார்கள்," என்று மஸ்தூரா குறிப்பிட்டார்.
நேற்று, அவர் அத்தகவல்களைக் கூறினார்.முன்னதாக நடைபெற்ற சில பேச்சுகளின்போது, அவ்விவகாரம் அறிவிக்கப்பட்டது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



