எஸ்பிஆர்எம் தலைவரை இடைநீக்கம் செய்ய வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்து

top-news

கோலாலம்பூர், பிப். 15-

டிஏபி கட்சியின் ஆலோசகர் லிம் குவான் எங் மற்றும் மூடா கட்சியின் இடைக்கால தலைவர் அமிரா ஐஷா அப்துல் அசீஸ் ஆகியோர், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எஸ்பிஆர்எம்) தலைமை ஆணையர் தான் ஸ்ரீ அசாம் பாக்கி மீது எழுந்துள்ள புதிய சர்ச்சையை முன்னிட்டு, அவர் தற்காலிகமாக பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட வேண்டும் என்று இன்று தனித்தனியாக வலியுறுத்தினர்.

விசாரணை முழுமையாக வெளிப்படையாகவும் எந்தவித பாதிப்பும் இன்றி நடைபெற வேண்டுமெனில், பதவியில் இருந்து விலகி நிற்பது அவசியம் என இருவரும் குறிப்பிட்டனர். பாகான் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான லிம் குவான் எங், 2022 ஜனவரி 12 ஆம் தேதி பக்காத்தான் ஹாராப்பான் தலைவர்கள் எடுத்த முடிவை தான் இன்னும் பின்பற்றிக் கொண்டிருக்கிறேன் என்றார்.

அந்த நேரத்தில் அசாம் பாக்கி மற்றும் தொடர்புடைய மற்ற இரண்டு நபர்கள் பங்கு வைத்திருப்பு விவகாரத்தில் சுயாதீன விசாரணைக்கு வழிவிட இடைநீக்கம் செய்யப்பட வேண்டும் என்று கூட்டாக கோரிக்கை விடுக்கப்பட்டதாக அவர் நினைவூட்டினார்.

இந்நிலையில், நிறுவன ஆணையம் (SSM) பதிவுகளை அடிப்படையாகக் கொண்டு மீண்டும் பங்கு வைத்திருப்பு குறித்த விவாதம் எழுந்துள்ளதால், பொதுமக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்த அரசாங்கம் தெளிவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் கேட்டுக் கொண்டார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *