ஹலால் சான்றிதழ் ரத்து – காபி மற்றும் பிஸ்கட் பொருட்கள் சந்தையில் இருந்து உடனடி திரும்பப் பெற உத்தரவு

top-news
FREE WEBSITE AD

மலாக்கா, ஏப். 3-

உள்ளூர் உற்பத்தியாளர்களின் காபி மற்றும் பிஸ்கட் பொருட்கள் அனைத்தும் உடனடியாக சந்தையில் இருந்து திரும்பப் பெறப்பட வேண்டும் என மாநில மத அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனதாக மாநில கல்வி, உயர்கல்வி மற்றும் சமய விவகாரக் குழுத் தலைவர் டத்தோ ரஹ்மாட் மரிமான் தெரிவித்ததார்.

இந்த மாத தொடக்கத்தில் இப்பொருட்களுக்கு வழங்கப்பட்ட ஹலால் சான்றிதழ் ரத்து செய்யப்பட்டதன் பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பொருட்கள் தயாரிக்கும் உபகரணங்களில் ‘முகல்லழா’ என வகைப்படுத்தப்படும் கடுமையான அசுத்தம் (நஜிஸ்) தொடர்பான பொருட்கள் கண்டறியப்பட்டதாக அவர் கூறினார். இதனால், குறிப்பாக முஸ்லிம் பயனர்கள் குழப்பமடையாத வகையில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் விளக்கினார்.

சம்பந்தப்பட்ட காலப்பகுதியில் தயாரிக்கப்பட்ட அனைத்து பொருட்களும் முழுமையாக சந்தையில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்றும், இதற்கான அமலாக்கம் கடுமையாக கண்காணிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த உத்தரவு, ஹலால் தரநிலைகளை பாதுகாக்கவும், பொதுமக்களின் நம்பிக்கையை நிலைநிறுத்தவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *