ஹோண்டுராஸில் பயங்கர துப்பாக்கிச்சூடு - இரு தாக்குதல்களில் 25 பேர் உயிரிழப்பு
- Surendran Sumdraraj
- 22 May, 2026
மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸில் நடைபெற்ற இரண்டு தனித்தனி துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் குறைந்தது 25 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களில் 6 போலீஸ் அதிகாரிகளும் அடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முதல் தாக்குதல் வடக்கு ஹோண்டுராஸின் Trujillo பகுதியில் உள்ள ஒரு தோட்டப் பண்ணையில் நடைபெற்றது. ஆயுதம் ஏந்திய நபர்கள் அங்கு திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியதில் குறைந்தது 19 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்தப் பகுதி நீண்டகாலமாக நிலத் தகராறு, போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆயுத கும்பல்களின் ஆதிக்கம் காரணமாக பதற்றமான பகுதியாக இருந்து வருகிறது.
அதேநேரத்தில், குவாத்தமாலா எல்லை அருகே உள்ள Omoa பகுதியில் நடைபெற்ற மற்றொரு தாக்குதலில் போதைப்பொருள் கும்பல்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் 6 போலீஸ் அதிகாரிகள் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவங்களுக்கு பின்னால் செயல்பட்டவர்களைக் கண்டறிய ஹோண்டுராஸ் அரசு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



