நவம்பருக்குள் 10,096 புதிய ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவார்கள்! – துணைக் கல்வி அமைச்சர் Wong Kah Woh உறுதி!
- Thinagaren Sanggaren
- 28 Oct, 2025
அக்தோபர் 28,
இவ்வாண்டு நவம்பருக்குள் 10,096 புதிய ஆசிரியர்கள் பள்ளிகளில் பணியமர்த்தப்படுவார்கள் என துணைக் கல்வி அமைச்சர் Wong Kah Woh நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் கற்றல் கற்பித்தலில் பட்டம் பெற்ற இளம் பட்டதாரிகளுக்கான நியமனங்கள் நவம்பருக்குள் முடிவடையும் என Wong Kah Woh தெரிவித்தார். பட்டம் பெற்றவர்கள் கல்வி அமைச்சால் மேற்கொள்ளப்பட்ட நேர்முகத் தேர்வைக் கடந்த செப்டம்பர் மாதம் மேற்கொண்டதாகவும் நவம்பர் மாதம் அவர்களுக்கான பணியமர்த்தக் கடிதங்களை அவர்கள் பெறுவார்கள் என Wong Kah Woh தெரிவித்தார்.
இந்த ஆண்டு இரு முறை புதிய ஆசிரியர்களுக்கான பணியமர்த்தங்களை மேற்கொண்டதில் மொத்தம் 20,141 புதிய ஆசிரியர்கள் பள்ளிகளில் பணியமர்த்தப்பட்டிருப்பதாக Wong Kah Woh தெரிவித்தார். IPG, UPSI, என அரசு பொதுப்பல்கலைக்கழகங்களில் கற்றல் கற்பித்தல் துறையில் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருப்பதாக Wong Kah Woh தெரிவித்தார். பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையைக் கல்வி அமைச்சு தீவிரமான ஒரு சிக்கலாக எடுத்துக் கொள்வதால் விரைந்து புதிய ஆசிரியர்களை நியமித்து வருவதாகவும் பணியமர்த்தப்படாத ஆசிரியர்கள் மேல் முறையீடு செய்து 14 நாள்களுக்குள் அவர்களுக்கான நேர்முகத் தேர்வும் நடத்தப்படுவதைத் துணைக் கல்வி அமைச்சர் Wong Kah Woh சுட்டிக்காட்டினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



