OKU மாணவியிடம் பாலியல் சீண்டல்! ஆசிரியர் கைது! காவல்துறை விசாரணை

top-news

ஜூலை7,

இடைநிலைப்பள்ளி ஆசிரியர் ஒருவர் அறிவுசார் குறைபாடுள்ள 16 வயது OKU மாணவியைத் தகாத முறையில் தொட்டு பாலியல் சீண்டல் செய்ததாக நம்பப்படுகிறது. சம்மந்தப்பட்ட ஆண் ஆசிரியரிடம் காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருவதாக Rembau மாவட்டக் காவல் ஆணையர் Hasani Hussain தெரிவித்தார். இச்சம்பவம் கடந்த மே மாதம் பள்ளியில் புறப்பாட நடவடிக்கையின் போது 16 வயது OKU மாணவியின் காலில் காயம் ஏற்பட்டதாகவும் காயத்தின் போது 36 வயது ஆண் ஆசிரியர் அம்மாணவியைத் தகாத முறையில் தொட்டதாகவும் பள்ளியின் மற்றோர் ஆசிரியர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக Rembau மாவட்டக் காவல் ஆணையர் Hasani Hussain தெரிவித்தார்.

கடந்த ஜூன் 30 ஆம் திகதி பாதிக்கப்பட்ட 16 வயது OKU மாணவி இச்சம்பவம் குறித்து ஆசிரியரிடம் தெரிவித்த நிலையில் சம்மந்தப்பட்ட ஆசிரியரும் உண்மை நிலையை அறிய காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பதாகவும் 36 வயது ஆசிரியர் சந்தேகத்தின் அடிப்படையில் மட்டுமே தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் Rembau மாவட்டக் காவல் ஆணையர் Hasani Hussain விளக்கமளித்துள்ளார்.


Seorang guru lelaki di Rembau ditahan kerana disyaki mencabul seorang pelajar OKU berusia 16 tahun semasa aktiviti luar sekolah. Kes terbongkar selepas seorang guru lain membuat laporan polis. Polis mengesahkan guru berkenaan disiasat lanjut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *