மகனைக் கொலை செய்ய முயற்சித்த ஆசிரியர் கைது!

- Sangeetha K Loganathan
- 15 May, 2025
மே 15,
தனது 11 வயது மகனைக் கத்தியால் குத்தி காயப்படுத்திய ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் தன் மீதானக் குற்றத்தை மறுத்து நீதிமன்ற விசாரணையைக் கோரியதுடன் ஜாமின் மனுவையும் தாக்கல் செய்தார். குற்றம் சாட்டப்பட்ட 47 வயது ஆசிரியர் கடந்த மே 2 பாசிர் மாஸில் உள்ள Pohon Tanjung குடியிருப்புப் பகுதியில் 11 வயது சிறுவனின் உடலில் கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சித்ததாகக் கைது செய்யப்பட்டார்.
முதற்கட்ட நீதிமன்ற விசாரணைக்காக இன்று Sesyen நீதிமன்றம் வந்த Asrolfandi Ab Suki எனும் 47 வயது ஆசிரியரின் மனநிலையைச் சோதிக்க வேண்டும் என வழக்கறிஞர் வேண்டுகோள் வைத்த நிலையில் ஜாமின் மனுவைத் தள்ளுபடி செய்து Ulu Kinta மருத்துவமனையில் மனநலன் சோதனையை மேற்கொள்ளும்படியும் அடுத்த ஜூன் 15 மேலதிக நீதிமன்ற விசாரணையை மேற்கொள்வதாகவும் Sesyen நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Seorang guru berusia 47 tahun dituduh cuba membunuh anak lelakinya berusia 11 tahun dengan menikamnya menggunakan pisau di Pasir Mas. Mahkamah memerintahkan pemeriksaan mental di Hospital Ulu Kinta dan menetapkan tarikh perbicaraan seterusnya pada 15 Jun.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *