5 வயது குழந்தைகளைத் தாக்கிய இஸ்லாம் சமயக் கல்வி ஆசிரியைக் கைது!
- Sangeetha K Loganathan
- 21 Jun, 2025
ஜூன் 21,
இஸ்லாம் சமயக் கல்விக் கூடத்தில் 5 குழந்தைகள் இருவர் துன்புறுத்தப்பட்டதாகச் சமூகவலைத்தளத்தில் பரவிய பதிவைக் கொண்டு சம்மந்தப்பட்ட இஸ்லாம் சமயக் கல்விக் கூடத்தின் பெண் ஆசிரியைக் கைது செய்யப்பட்டிருப்பதாகக் Kuala Muda மாவட்டக் காவல் ஆணையர் Hanyan Ramlan தெரிவித்தார். இது தொடர்பானக் காணொலி சமூகவலைத்தளத்திலிருந்து தேசிய பல்லூடகப் பாதுகாப்பு ஆணையத்தால் நீக்கப்பட்டிருப்பதால் சம்மந்தப்பட்ட காணொலியைப் பொதுவில் பகிரவேண்டாம் என Kuala Muda மாவட்டக் காவல் ஆணையர் Hanyan Ramlan எச்சரிக்கை விடுத்தார்.
சுங்கை பெட்டாணியில் உள்ள ஓர் இஸ்லாம் சமயக் கல்விக் கூடத்தில் கடந்த வியாழக்கிழமை காலை இச்சம்பவம் நிகழ்ந்ததாகப் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தைகளின் பெற்றோர்களும் காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பதாகவும் சம்மந்தப்பட்ட இஸ்லாம் சமயக் கல்விக் கூடத்தில் பகுதி நேரமாக வேலை செய்து வரும் 28 வயது இளம் ஆசிரியை இன்று காலை 10 மணிக்குக் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் Kuala Muda மாவட்டக் காவல் ஆணையர் Hanyan Ramlan தெரிவித்தார். பாதிக்கப்பட்ட இரு குழந்தைகளும் பிரம்பால் தாக்கப்பட்டிருப்பது சுகாதாரப் பரிசோதனையில் உறுதிச் செய்யப்பட்டிருக்கும் நிலையில் இரு குழந்தைகளும் சிகிச்சைக்குப் பின்னர் வீட்டுக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
Seorang guru wanita berusia 28 tahun dari kelas pendidikan Islam ditahan kerana disyaki memukul dua kanak-kanak berumur 5 tahun dengan rotan di Sungai Petani. Polis mengesahkan kejadian menerusi laporan ibu bapa dan pemeriksaan kesihatan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



