ஆசிரியர்களிடையே அதிகரிக்கும் மெத்தனம்! துணைக் கல்வி அமைச்சர் குற்றச்சாட்டு!

top-news
FREE WEBSITE AD

ஆகஸ்ட் 20,

பள்ளிகளில் பணியமர்த்தப்படும் ஆசிரியர்கள் விருப்ப பணி ஓய்வைச் சீக்கிரமாகப் பெறுவது அதிகரித்துள்ளதாகத் துணைக் கல்வி அமைச்சர் Wong Kah Woh இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். பெரும்பாலான ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயது வரும் முன்னமே விருப்ப ஓய்விற்காக விண்ணப்பம் செய்வதாகக் கல்வி அமைச்சின் ஆய்வுகள் மூலமாக அறியப்படுவதாக Wong Kah Woh தெரிவித்தார். விருப்ப ஓய்வு பெறும் பெரும்பாலான ஆசிரியர்கள் தொடர்ந்து பள்ளிகளில் வேலை செய்ய ஆரவமில்லை என்பதையே காரணமாக வழங்குவதாக ஆய்வின் முடிவுகள் காட்டுவதாக Wong Kah Woh தெரிவித்தார். 

சுமார் 67% ஆசிரியர்கள் இனியும் தங்கள் பணியைத் தொடர ஆரவமில்லை என்றும், 17% ஆசிரியர்கள் குடும்பப் பிரச்சனை என்றும், 7% ஆசிரியர்கள் சுகாதாரப் பிரச்சனை என்றும், 5% ஆசிரியர்கள் பணிச்சுமை என்றும் 2% தனிப்பட்ட பிரச்சனை என்றும் விருப்ப ஓய்விற்கான காரணங்களை வழங்கியிருப்பதாகத் துணைக் கல்வி அமைச்சர் Wong Kah Woh விளக்கமளித்தார். முந்தைய காலங்களில் ஓய்வு பெறும் வயதை அடைந்தாலும் ஆசிரியர்கள் பணிக்கான கால அளவீட்டை நீட்டிக்க விண்ணப்பம் செய்வார்கள். ஆனால் இப்போது பெரும்பாலான ஆசிரியர்கள் ஓய்வு பெறும் முன்னமே விரைவாக ஓய்வு பெற வேண்டும் என மெத்தனமானப் போக்கில் விண்ணப்பம் செய்கின்றனர் என Wong Kah Woh தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *