ஆசிரியையைத் தாக்கிய கொள்ளைக் கும்பல்!

top-news

ஏப்ரல் 22,

பாலர்பள்ளியில் கொள்ளையடிக்க முயன்ற கொள்ளையர்கள் மூவர் ஆசிரியை ஒருவரைக் கடுமையாகத் தாக்கி கொள்ளையடிக்க முயன்றதாகவும் கொள்ளையில் ஈடுபட்ட ஆடவர்களைக் காவல்துறையினர் தேடி வருவதாகவும் Sabak Bernam, மாவட்டக் காவல் ஆணையர் Yusof Ahmad தெரிவித்தார். இன்று காலை 9.35 மணிக்குச் சபாக் பெர்ணாமில் உள்ள Pasir Panjang பாலர்பள்ளியில் இச்சம்பவம் நிகழ்ந்திருப்பதாகவும் இது தொடர்பானக் காணொலியைச் சமூக வலைத்தில் பரப்ப வேண்டாம் என்றும் Sabak Bernam, மாவட்டக் காவல் ஆணையர் Yusof Ahmad வலியுறுத்தினார்.

Perodua Bezza வாகனத்தில் வந்த 3 ஆண்களும் ஆசிரியை ஒருவரைச் சரமாரியாகத் தாக்கி அவரிடமிருந்த தங்கச் சங்கிலிகளையும் கைப்பேசிகளையும் கொள்ளையடித்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக Sabak Bernam, மாவட்டக் காவல் ஆணையர் Yusof Ahmad தெரிவித்தார். தாக்குதலுக்குள்ளான ஆசிரியைத் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் கொள்ளையில் ஈடுபட்டவர்களைக் காவல்துறையினர் தேடி வருவதாகவும் சந்தேகத்திற்குரிய வாகனத்தைப் பொதுமக்கள் கண்டிருந்தால் காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்கும்படியும் Sabak Bernam, மாவட்டக் காவல் ஆணையர் Yusof Ahmad தெரிவித்தார்.

Tiga lelaki menyerang seorang guru tadika di Pasir Panjang, Sabak Bernam, dan merompaknya. Mangsa kini dirawat di hospital. Polis sedang memburu suspek dan meminta orang ramai yang melihat kenderaan terbabit tampil memberi maklumat.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *