மனைவியைக் கத்தியால் குத்திய ஆசிரியர் கைது!
- Thinagaren Sanggaren
- 27 Aug, 2025
ஆகஸ்ட் 27,
ஆசிரியர் ஒருவர் தனது மனைவியைக் கத்தியால் குத்திய பின்னர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை பினாங்கில் Taman Tunas Muda குடியிருப்புப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இச்சம்பவம் நிகழ்ந்ததாகத் Barat Daya மாவட்டக் காவல் ஆணையர் Sazalee Adam தெரிவித்தார். அதிகாலை 6 மணிக்குக் காவல் நிலையத்திற்குப் பாதிக்கப்பட்ட 28 வயது மனைவியின் தாயார் அவசர அழைப்பில் புகார் அளித்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக Sazalee Adam தெரிவித்தார். 30 ஆசிரியரையும் அவரின் 28 வயது மனைவியையும் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் இருவரும் படுகாயம் அடைந்திருப்பதைக் காவல்துறையினர் உறுதிப்படுத்தியிருப்பதாகவும் Sazalee Adam தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட 28 வயது பெண்ணின் தாயாரிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் 30 வயது ஆசிரியர் கடந்த சில நாள்களாக மன அழுத்தத்தில் இருந்ததாகத் தெரிய வந்திருப்பதாகவும் சமையலறையில் இருந்த தனது 28 வயது மனைவியின் கழுத்தில் குத்திய பின்னர் தனது கை மணிக்கட்டையும் வெட்டியதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் வாக்குமூலம் அளித்திருப்பதாக Sazalee Adam தெரிவித்தார். பாதிக்கப்பட்ட இருவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மேலதிக விசாரணைகளைக் காவல்துறையினர் தொடர்வதாக Barat Daya மாவட்டக் காவல் ஆணையர் Sazalee Adam தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



