சமூக ஊடக பயன்பாட்டிற்கு 16 வயது வரம்பு – ஜூலை மாதத்தில் அமலுக்கு வரும் என எதிர்பார்ப்பு
- Tamil Malar (Reporter)
- 26 Jan, 2026
கூலாய், ஜன. 26-
குழந்தைகள், இளையவர்களை ஆன்லைன் துஷ்பிரயோகம், பொருத்தமற்ற உள்ளடக்கங்களிலிருந்து பாதுகாக்கும் நோக்கில், சமூக ஊடக பயன்பாட்டிற்கு 16 வயது குறைந்தபட்ச வரம்பை விதிக்கும் நடவடிக்கை, இந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்பு துறை துணை அமைச்சர் டியோ நியே சிங் கூறுகையில், இந்த நடவடிக்கை தற்போது ‘ரெகுலேட்டரி சாண்ட்பாக்ஸ்’ (regulatory sandbox) கட்டத்தில் இருப்பதாகத் தெரிவித்தார். முழுமையான அமலாக்கத்திற்கு முன், அரசாங்கம் சிறந்த, பாதுகாப்பான நடைமுறைகளைச் சோதித்து பார்க்க உதவும் என்றார்.
இந்த முயற்சி, ஆன்லைன் பாதுகாப்பு சட்டம் (OnSA)-க்கு இணங்க மேற்கொள்ளப்படுவதாக அவர் விளக்கினார். அதன்படி, சமூக ஊடக தளங்களை வழங்கும் நிறுவனங்களுடன் கலந்துரையாடல்கள் தொடங்கப்பட்டுள்ளன. வயது சரிபார்ப்பு முறையை எவ்வாறு திறம்படவும் பாதுகாப்பாகவும் நடைமுறைப்படுத்தலாம் என்பது குறித்து அரசும், தள வழங்குநர்களும் இணைந்து ஆலோசித்து வருவதாகவும் அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



