PN புதிய தலைவரை தேர்வு செய்ய அவசரக் கூட்டம் – ஞாயிற்றுக்கிழமை முக்கிய தீர்மானம்

top-news

மாராங், பிப். 20-

பெரிக்காத்தான் நேஷனல் (PN) கூட்டணியின் புதிய தலைவராக யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் அதிகரித்துள்ளது. இந்த கேள்விக்கு விடை வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள உயர்மட்ட கவுன்சில் (MT) அவசரக் கூட்டத்தில் வெளிவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

PN துணைத் தலைவர் மற்றும் PAS கட்சியின் தலைவர் தான் ஶ்ரீ அப்துல் ஹாடி அவாங் கூறுகையில், தலைநகரில் உள்ள PAS தலைமையகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் புதிய PN தலைவரை தேர்வு செய்வதுடன், பாராளுமன்றத்தில் புதிய எதிர்க்கட்சித் தலைவரை நியமிக்கும் விவகாரமும் ஆலோசிக்கப்படும் என்றார்.

முன்னாள் PN தலைவர் மற்றும் பாகோ நாடாளுமன்ற உறுப்பினர் தான் ஶ்ரீ முஹியிதீன் யாசின் கடந்த டிசம்பர் மாத இறுதியில் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, கூட்டணியின் தலைமை மாற்றம் அவசியமானதாகியுள்ளது. இதையடுத்து PN தலைமையை PAS ஏற்கும் வாய்ப்பு அதிகம் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

“புதிய தலைவரை தேர்வு செய்வது குறித்து விரிவாக விவாதித்து முடிவு எடுக்கப்படும். அதேபோல், எதிர்க்கட்சித் தலைவர் பதவி பற்றியும் கூட்டத்தில் பேசப்படலாம். இதுவரை PAS எந்த இறுதி முடிவையும் எடுக்கவில்லை,” என்று அப்துல் ஹாடி அவாங் தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தின் முடிவு, நாட்டின் அரசியல் நிலைப்பாடு மற்றும் எதிர்க்கட்சியின் எதிர்கால திசையை தீர்மானிக்கும் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *