மடானி அரசு இஸ்லாத்தைப் பின்பற்றவில்லை! பாஸ் தலைவர் Hadi Awang குற்றச்சாட்டு!
- Thinagaren Sanggaren
- 27 Jan, 2026
ஜனவரி 27,
மடானி அரசு மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமலும் இஸ்லாத்தைப் பின்பற்றுவதிலுமிருந்து தவறி விட்டதாகப் பாஸ் கட்சியின் தலைவர் TAN SRI Abdul Hadi Awang இன்று நாடாளுமன்றத்தில் குற்றம்சாட்டினார். அன்வார் தலைமையிலான மடானி அரசு கடந்த 4 ஆண்டுகளாக எந்தவொரு சீர்த்திருத்தங்களையும் முழுமையாகச் செயல்படுத்தவில்லை. மாறாகக் காரணங்களை அடுக்கிக் கொண்டிருக்கிறது என TAN SRI Abdul Hadi Awang தெரிவத்தார்.
அடுத்த பொதுத்தேர்தலிலும் அன்வார் சீர்த்திருத்தங்களைப் பற்றி பேசுவார். ஆனால் கடந்த 5 ஆண்டுகளாகச் செயல்படுத்தவில்லை என்பதை அன்வார் உணர வேண்டும் என TAN SRI Abdul Hadi Awang தெரிவித்தார். ஊழலுக்கு எதிராகவும் லஞ்சத்திற்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால் லஞ்சம் வாங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அரசு, லஞ்சம் கொடுத்தவர்களையும் இடைத்தரகர்களையும் அப்படியே விட்டுவிட்டது. சிறந்த ஆளுமைமிக்க தலைமைக்குச் சீர்த்திருத்தங்களைச் செயல்படுத்த ஒரு சகாப்தம் போதும் என்கிறது இஸ்லாத்தின் Caliph Umar Abdul. ஆனால் அன்வார் அடுத்த பொதுத்தேர்தலிலும் வெற்றி பெற மீண்டும் சீர்த்திருத்ததைப் பற்றியே பேசி மக்களையும் இஸ்லாத்தையும் ஏமாற்றுவார் என TAN SRI Abdul Hadi Awang தெரிவத்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



