எனக்கு பிரதமர் பதவி வேண்டாம்! ஆனால்...... – HADI AWANG தந்திரம்!
- Thinagaren Sanggaren
- 15 Sep, 2025
செப்டம்பர் 15,
பெரிக்காத்தான் அடுத்த பொதுத்தேர்தலில் ஆட்சி அமைக்கும் சூழல் பரவலாகி வரும் நிலையில் அதன் பிரதமர் வேட்பாளர் யார் எனும் கேள்விகள் வலுத்திருந்தாலும் நான் பிரதமராகமாட்டேன் என பாஸ் கட்சியின் தலைவர் Tan Sri Abdul Hadi Awang இன்று நடைபெற்ற பாஸ் கட்சியின் பேராளர் மாநாட்டில் வெளிப்படையாகத் தெரிவித்தார். அடுத்த 16 ஆவது பொதுத்தேர்தலில் பெரிக்காத்தானின் வெற்றியை உறுதிச் செய்ய மட்டுமே இப்போது முழுவதுமாக உழைக்க வேண்டும் என Tan Sri Abdul Hadi Awang பாஸ் கட்சியின் உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டார்.
இஸ்லாத்தைக் காக்கும் யாராக இருந்தாலும் அவர் பிரதமராகலாம் என்றும் அப்படியான இஸ்லாத்தைப் புறக்கணிக்காத ஒரு தலைவர் தான் பெரிக்காத்தானின் பிரதமராகப் பொறுப்பேற்பார் என்றும் Tan Sri Abdul Hadi Awang தெரிவித்தார். நான் கிழவன். என்னை விட மதிப்பும் மரியாதையுமிக்க பலர் பாஸ் கட்சியில் இருக்கிறீர்கள். 70 வயதுக்கு மேலானவர்கள் ஆலோசகர்களாக மட்டுமே இருக்கட்டும். 70 வயதுக்குற்பட்டவர்கள் பிரதமராகட்டும் என Tan Sri Abdul Hadi Awang தெரிவித்தார். பெரிக்காத்தான் தலைவரும் முன்னாள் பிரதமருமான முகைதீனுக்குத் தற்போது 78 வயது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



