தாய்லாந்து - கம்போடியா விவகாரம்! டிரம்புடன் அன்வார் போனில் பேச்சுவார்த்தை

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர்: தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே எல்லைப் பிரச்சினைகளுக்கு நீடித்த தீர்வை எட்ட உதவுவதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தீவிர பங்களிப்பை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வரவேற்றார்.

இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பிரச்சினையில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து டிரம்புடன் நேற்று போனில்  விவாதித்ததாக அன்வார் கூறினார். மேலும் பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திர முயற்சிகளை ஒரு சாத்தியமான தீர்வாகத் தேர்ந்தெடுப்பதற்கு தாய்லாந்து மற்றும் கம்போடியா தொடர்ந்து தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

கோலாலம்பூர் அமைதி ஒப்பந்த கட்டமைப்பின் கீழ் ஒப்புக் கொள்ளப்பட்ட அணுகுமுறையின்படி, இரு நாடுகளும் எல்லையிலிருந்து தங்கள் படைகளைத் திரும்பப் பெற்றுள்ளன என்று தெரிவித்தார்.

ஜூலை மோதலுக்குப் பிறகு பதட்டங்களை மேலும் அதிகரித்த எல்லையில் கண்ணிவெடிகள் வெடித்ததைத் தொடர்ந்து, கம்போடியாவுடனான அனைத்து ஒப்பந்தங்களையும் நிறுத்தி வைப்பதாக தாய் ஆயுதப்படைகளின் தலைவர் திங்களன்று அறிவித்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

சிசாகெட் மாகாணத்தில் ரோந்துப் பணியின் போது PMN-2 கண்ணிவெடி வெடித்ததில் நான்கு தாய் வீரர்கள் காயமடைந்ததாகவும், ஒருவர் தனது வலது காலை இழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

47வது ஆசியான் உச்சிமாநாட்டின் போது, ​​அன்வார் மற்றும் டிரம்ப் முன்னிலையில், கோலாலம்பூர் அமைதி ஒப்பந்தத்தில் தாய் பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் மற்றும் ஹுன் மானெட் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *