தாய்லாந்து - கம்போடியா சமரச முயற்சி- மலேசியாவின் பங்கிற்கு அங்கீகாரம்!

top-news
FREE WEBSITE AD

லாருட், ஆக.17-

தாய்லாந்துக்கும் கம்போடியாவிற்கும் இடையிலான எல்லையில் ஏற்பட்ட பதற்றங்களைத் தொடர்ந்து, அவ்விரு நாடுகளுக்கு இடையில் சமரச முயற்சிகளில், ஆசியான் தலைவரான மலேசியாவின் பங்கு உலகளவில் அங்கீகரிக்கப்பட்டு உள்ளது.

மலேசியாவின் பங்களிப்பை சிலர் மறுத்தாலும், நல்லிணக்க முயற்சிகளில் அந்நிய தரப்பினர் வைத்திருக்கும் நம்பிக்கையானது.நாட்டின் அரசியல், பொருளாதாரநிலைத் தன்மை மீது கொண்டிருக்கும் நம்பிக்கையை மெய்பிப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்கூறியுள்ளார்.

'மலேசியாவில் வாழ் வதால் கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள். ஏனென்றால் நமது அரசியல் நிலையானது. மக்கள் பொருளாதார வளர்ச்சியை மதிக்கிறார்கள். பிரச்சினைகள் ஏற்படும் போது அவர்கள் அமைதிக்கான முயற்சிகளை நம்மிடம் ஒப்படைக்கிறார்கள். எதிர்க்கட்சியில் உள்ள சிலர் அதை அங்கீகரிக்க விரும்பாவிட்டாலும், பரவாயில்லை உலகமே அங்கீகரிக்கிறது."என்றார் அவர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையில் ஏற்பட்ட பதற்றங்களை அடுத்து, பொது எல்லை செயற்குழு கூட்டம் மூலம் மேற்கொள்ளப்பட்ட சமரச முயற்சிகளில், ஆசியான் தலைவராக நாடு முக்கிய பங்கு வகித்ததாக, மலேசியாவுக்கான அமெரிக்கத் தூதர் எட்கர் டி.ககன், தெரிவித்தாகக் கூறப்படுகிறது.

பேராக், லாருட்டில், “நவீன விவசாயப் புரட்சியை முன்னெடுப்பது, மக்களின் பொருளாதாரத்தை உருவாக்குவது" என்ற கருப்பொருளில் நடைபெற்ற மடானி தொழில்முனைவோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது பிரதமர் இதனைக் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *