பாரிசானுக்கு ஆதரவாக களமிறங்கும் கைரி!
- Shan Siva
- 15 Nov, 2025
கோலாலம்பூர், நவ 15: சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சரும், அம்னோவின் இளைஞர் பிரிவு முன்னாள் தலைவருமான கைரி ஜமாலுதீன், 17வது சபா பொதுத் தேர்தலில் பாரிசன் நேஷனல் (பிஎன்) வேட்பாளர்களை ஆதரிப்பதற்காக சபாவுக்குப் பயணம் செய்யப் போவதாகக் தெரிவித்துள்ளார். அம்னோவில் மீண்டும் சேர்க்கப்படுவது குறித்து கேள்விகள் எஞ்சியுள்ள நிலையில் அவரின் இந்த ஆதரவு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
பாரிசானின்
இளைஞர் பிரிவு நண்பர்களின் அழைப்பின் பேரில் சபாவுக்கு வருகை தருவதாகத் தெரிவித்துள்ளார்.
முன்பு அம்னோ
இளைஞர் இயக்கத்தில் என்னுடன் இருந்த பழைய நண்பர்களிடமிருந்து எனக்கு அழைப்பும்
கோரிக்கையும் வந்துள்ளது என்று அவர் இன்று
முன்னதாக 2025 மலேசிய குடும்ப ஓட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம்
கூறினார்.
கட்சியின்
உயர்மட்டத் தலைமையிடமிருந்து, குறிப்பாக அம்னோ
தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹித் ஹமிடியிடமிருந்து ஒப்புதல் பெற்ற பிறகு,
கைரி அம்னோவில்
இணைவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக முந்தைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



