150 நீதிபதிகளுக்குச் சம்பள உயர்வு! பிரதமர் அன்வார் அறிவிப்பு!
- Thinagaren Sanggaren
- 29 Dec, 2025
டிசம்பர் 29,
நாட்டின் நீதித்துறையைச் சிறப்பாக வழிநடத்தும் நீதிபதிகளுக்கான ஊதியம் உயர்த்தப்படும் என கடந்த 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் பிரதமர் அன்வார் குறிப்பிட்டிருந்ததை அடுத்து தலைமை நீதிபதிகளுக்கான ஊதியம் எதிர்வரும் ஜனவரி 1 முதல் உயர்த்தப்படுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. சுமார் 150க்கும் மேற்பட்ட நீதிபதிகளின் ஊதியம் உயர்த்தப்படுவதாகவும் சலுகைகள் மாதாந்திர ஊக்கத் தொகைகளில் மாற்றமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமை நீதிபதிக்கு முன்னதாக 30,500 ரிங்கிட்டாக இருந்த ஊதியம் இப்பொது 39,650 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது மலாயா, சபா, சரவாக் ஆகிய தலைமை நீதிபதிகளுக்கு என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூட்டரசு நீதிபதிகள் 37,500 ரிங்கிட்டும் மேல்முறையீட்டு நீதிபதிகள் 35,750 ரிங்கிட்டும், உயர்நீதிமன்ற நீதிபதிகள் 34,450 ரிங்கிட்டும், ஒப்பந்தத்தில் பணியாற்றும் நீதித்துறை ஆணையர்கள் 33,150 ரிங்கிட்டும் ஊதியமாகப் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதியாகக் கடந்த 2015 ஆம் ஆண்டில் நீதிபதிகளில் ஊதியம் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



