ஞாயிற்றுக்கிழமை “அசாதாரண அறிவிப்பு” வெளியிடுவேன்: ரபிசி ரம்லி
- Surendran Sumdraraj
- 14 May, 2026
கோலாலம்பூர், மே 14-
பண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் Datuk Seri Rafizi Ramli, தனது அரசியல் எதிர்காலம் மற்றும் Setiawangsa நாடாளுமன்ற உறுப்பினர் Nik Nazmi Nik Ahmad தொடர்பாக வரும் ஞாயிற்றுக்கிழமை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
புத்ராஜெயாவில் உள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (SPRM) தலைமையகத்தில் இன்று தன்னார்வ அடிப்படையில் வாக்குமூலம் அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரபிசி, இது சாதாரண அறிவிப்பு அல்ல என குறிப்பிட்டார்.
“சாதாரண அறிவிப்பாக இருந்தால், அதை நான் TikTok-இல் வெளியிட்டிருப்பேன். ஆனால் இது அதைவிட முக்கியமானது,” என்று அவர் கூறினார்.
எனினும், அந்த அறிவிப்பின் தன்மை என்ன என்பது குறித்து அவர் மேலதிக தகவல் வெளியிட மறுத்தார்.
PKR கட்சியின் முன்னாள் துணைத் தலைவராக இருந்த ரபிசி ரம்லி அண்மைக்காலமாக தேசிய அரசியலில் பல்வேறு முக்கிய கருத்துகளை வெளிப்படுத்தி வந்துள்ளார். அதேவேளையில், நிக் நஸ்மி நிக் அகமட்டின் பெயரும் இந்த அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ளதால், அரசியல் வட்டாரங்களில் பல்வேறு ஊகங்கள் கிளம்பியுள்ளன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



