சுனாமியால் ஜப்பானில் கரை ஒதுங்கும் திமிங்கலங்கள்!
- Muthu Kumar
- 31 Jul, 2025
ஜப்பானில் சுனாமி காரணமாக திமிங்கலங்கள் கரை ஒதுங்கியுள்ளன.ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்திற்கு அருகில் 8.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, ரஷ்யாவின் குரில் தீவுகள் மற்றும் ஜப்பானின் வடக்கு தீவு பகுதியான ஹொக்கைடோவில் 12 அடி (4 மீட்டர்) உயரம் வரை சுனாமி தாக்கியது.
கடலோர நகரங்களில், உள்ள மக்கள் பாதுகாப்பாக இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். ஜப்பானின் ஹோக்கைடோ பகுதியில் தொடர்ந்து சுனாமி அலைகள் உயர்ந்து வருகிறது. இதனைத்தொடர்ந்து, சீனா, பிரிட்டிஷ் கொலம்பியா, அமெரிக்கா, ஹவாய் தீவு, ஆஸ்திரேலியா என பல்வேறு பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் உள்ள துறைமுகங்கள் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளது.மேலும், சிபாவில் உள்ள ஹிராசுனா கடற்கரையில் 4 திமிங்கலங்கள் கரை ஒதுங்கிய காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



