HAMAS போராட்டவாதிகளின் கூடாரமாகிறதா மலேசியா? காவல்துறை மறுப்பு!
- Thinagaren Sanggaren
- 24 Sep, 2025
செப்டம்பர் 24,
இஸ்ரேல் பாலஸ்தினப் போரை நடத்தும் எந்தவோர் அமைப்பையும் மலேசியா ஆதரிக்கவில்லை என தேசிய காவல் துறை தலைவர் DATUK SERI MOHD KHALID ISMAIL விளக்கமளித்தார். HAMAS போராட்டவாதிகளை மலேசியா அரவணைத்து ஆதரவளிப்பதாக அமேரிக்காவின் பயங்கரவாத நிதி ஆய்வு நிபுணர் JONATHAN SCHANZER குற்றம்சாட்டியிருப்பது அடிப்படை ஆதாரமற்றவை என DATUK SERI MOHD KHALID ISMAIL தெரிவித்தார். பாலஸ்தீனியப் போரை நடத்தும் எந்தவொரு தரப்பிற்கும் மலேசியா அங்கீகரிக்கவில்லை என்றும் மனிதாபிமான அடிப்படையில் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களுக்கு மலேசியா மருத்துவ உதவிகளைச் செய்து வருவதாக DATUK SERI MOHD KHALID ISMAIL நினைவூட்டினார்.
பாலஸ்தீனியப் போராட்டம் என்பது இரு நாடுகளுக்கிடையிலான
எல்லை பகிர்வுப் பிரச்சனையாக மட்டுமே பார்க்க கூடாது. அது ஒரு குறிப்பிட்ட சமூகத்தைத்
திட்டமிட்டு அழிக்கும் முயற்சி. அதைத் தான் மலேசியா கண்டிக்கிறது. அப்படி கண்டித்தாலும்
மலேசியா அதன் வரம்பை மீறி ஆயுதப்போரை ஊக்குவிக்கும் வகையில் எந்தவொரு நடவடிக்கையிலும்
ஈடுபட்டதில்லை என தேசிய காவல் துறை தலைவர் DATUK SERI MOHD KHALID ISMAIL விளக்கமளித்தார். பல்வேறு நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட இனவெறித் தாக்குதலுக்கு
மலேசியா கண்டனம் தெரிவித்துள்ளது. அந்த வரிசையில் பாலஸ்தீனிய மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட
தாக்குதலையும் மலேசியா கண்டிக்கிறது என தேசிய காவல் துறை தலைவர் DATUK SERI
MOHD KHALID ISMAIL அமேரிக்காவின் பயங்கரவாத நிதி ஆய்வு நிபுணர்
JONATHAN SCHANZER-இன் அறிக்கைக்குப் பதிலளித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



