நாடாளுமன்றத்திற்கு அவமானம்! வான் ஃபைசாலின் அறிவின்மை அது!
- Shan Siva
- 21 Aug, 2025
கோலாலம்பூர், ஆக 21: பிரிட்டிஷ் காலனித்துவ அதிகாரி ஸ்டாம்ஃபோர்ட் ராஃபிள்ஸின் பாரம்பரியத்தை ஒழிக்கும் முயற்சியாக, ரஃப்லேசியாவை மறுபெயரிட மாச்சாங் நாடாளுமன்ற உறுப்பினர் வான் அகமது ஃபைசால் வான் அகமட் கமாலின் முன்மொழிவை கல்வியாளர் கசாலி இஸ்மாயில், நாடாளுமன்றத்திற்கு ஒரு அவமானம் என்றும், பூக்களின் அறிவியல் வகைப்பாடு குறித்த அவரின் அறிவின்மையை இது காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.
ரஃப்லேசியா என்பது
ஒரு பிராண்ட் அல்லது தெருப் பெயர் அல்ல. இது தென்கிழக்கு ஆசியாவில் காணப்படும் ஒரு
தாவர இனத்தின் அறிவியல் பெயர்.
இதன் மூலம் அவர் காலனித்துவத்தை சவால் செய்யவில்லை. சேவை
செய்வதாக சத்தியம் செய்த நாடாளுமன்றத்தையே சங்கடப்படுத்துகிறார் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
அடுத்து என்ன?
ஐசக் நியூட்டன் மலேசியர் அல்ல என்பதால்
நியூட்டனின் சட்டங்களை மறுபெயரிடுங்கள்? என்று அவர் கூறியதாக போர்னியோ போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது..
பெரிகாத்தான்
நேஷனல் நாடாளுமன்ற உறுப்பினர் மக்களவையில் தனது நேரத்தை வாழ்க்கைச் செலவு, சுற்றுச்சூழல் மற்றும் கல்வி பிரச்சினைகள் போன்ற அதிக
அழுத்தமான விஷயங்கள் குறித்து பேச வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
ஒருவேளை அடுத்த
வாரம் ஹோமோ சேபியன்களையும் மறுபெயரிட வேண்டும்? எல்லாவற்றிற்கும் மேலாக, 'ஹோமோ' என்ற லத்தீன் பெயர்
அவர்களைக் குழப்பக் கூடும். மேலும் 'சேபியன்கள்' ஞானத்தைக்
குறிக்கிறது. ஆனால் அந்த
இனத்தைச் சேர்ந்த அனைவரும் சம அளவில் ஞானத்தைக் கொண்டிருக்கவில்லை என்பது அவரின் கருத்து
மூலம் தெளிவாகிறது என்று கஸாலி நகைச்சுவையாகக் கூறினார்.
சபாவின் Crocker Range தேசிய பூங்காவில் ரஃப்லேசியா வனப்பகுதியை
அமைப்பதில் மருத்துவ நோயெதிர்ப்பு நிபுணரான கஸாலி முக்கிய பங்கு வகித்ததாகக்
கூறப்படுகிறது.
செவ்வாயன்று
ரஃப்லேசியாவின் பெயரை மாற்ற வான் ஃபைசால் பரிந்துரைத்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



