ஹம்சாவை இன்னும் சந்திக்கவில்லை! சந்திக்கலாமா? – பாரிசான் விளக்கம்!

top-news
FREE WEBSITE AD

பிப்ரவரி 26,

பெர்சத்துவிலிருந்து நீக்கப்பட்டிருக்கும் எதிர்க் கட்சித் தலைவரான Hamzah Zainudin பாரிசான் தலைவர்களைச் சந்தித்ததாக வெளிவந்திருக்கும் செய்தி ஊகத்தால் பரப்பட்டது மட்டுமே என பாரிசான் பொது செயலாளர் Datuk Seri Zambry Abdul Kadir விளக்கமளித்தார். பாரிசான் தலைவர்கள் யாரும் ஹம்சாவைச் சந்திக்கவில்லை. நாங்கள் இன்னும் அவரைச் சந்திக்கவில்லை. ஆனால் நாங்கள் சந்திக்க வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்கள் என்றால் சொல்லுங்கள் நாங்கள் சந்திக்கிறோம் என Datuk Seri Zambry Abdul Kadir செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

முன்னதாகப் பாரிசான் தலைவர் Zahid Hamidi, அம்னோவிலிருந்து விலகியவர்கள் மீண்டும் அம்னோவுக்குத் திரும்பும் காலம் நெருங்கி வருவதால் அம்னோவிலிருந்து பிரிந்த Hamzahவும் மீண்டும் அம்னோவுக்குத் திரும்பலாம் என தெரிவித்தார். 2000 ஆம் ஆண்டு அம்னோவில் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய Hamzah Zainudin 2008 முதல் 2018 வரையில் பாரிசானின் LARUT நாடாளுமன்ற உறுப்பினராகவும் அதன் பின்னர் 2020 ஆம் ஆண்டு மகாதீர் தலைமையிலான ஆட்சியைக் கவிழ்த்து முகைதீன் பிரதமரான போது அம்னோவிலிருந்து விலகி முகைதீனுடன் Hamzah Zainudin இணைந்து பெர்சத்துக் கட்சியின் துணைத் தலைவராகப் பொறுப்பேற்றார். அதன் பின்னர் கடந்த 16 பிப்ரவரி பெர்சத்து தலைவர் முகைதீனுக்கு எதிராகச் செயல்பட்டதால் பெர்சத்து கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவால் பெர்சத்துக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *