வெளிநாட்டில் இருப்பதால் ஹம்சா பெர்சத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரணையில் கலந்து கொள்ளவில்லை
- Tamil Malar (Reporter)
- 11 Feb, 2026
கோலாலம்பூர், பிப். 11-
பெர்சத்து கட்சியின் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ ஹம்சா சைனுதீன், நாளை நடைபெறவுள்ள கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு (Lembaga Disiplin) விசாரணையில் பங்கேற்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் தற்போது வெளிநாட்டில் இருப்பதால் இந்த விசாரணையில் கலந்துகொள்ள இயலாது என அவரது செயலாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஹம்சாவின் செயலாளர் அகமத் இக்வான் பத்லி கூறுகையில், லாருட் நாடாளுமன்ற உறுப்பினரான ஹம்சா தற்போது ஆஸ்திரேலியாவின் சிட்னியில் இருப்பதாகத் தெரிவித்தார்.
தனது மகளின் பல்கலைக்கழகப் பதிவு தொடர்பான நடவடிக்கைகளுக்கு உதவவும், உடனிருந்து வழிகாட்டவும் ஹம்சா ஆஸ்திரேலியா சென்றுள்ளார். இதற்கிடையில் கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி, பெர்சத்து ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்ற அறிவிப்பு அவருக்குக் கிடைத்ததாகவும் அவர் விளக்கினார்.
அறிவிப்பு கிடைத்த உடனேயே, விசாரணை நாளில் தாம் நாட்டிற்கு வெளியே இருப்பதால் கலந்து கொள்ள முடியாது என்று ஹம்சா ஒழுங்கு நடவடிக்கை குழுவிற்கு உடனடியாக தகவல் அளித்ததாகவும் அகமத் இக்வான் பத்லி கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



