HAMZAH பெரிக்காத்தான் உறுப்பினர் இல்லை! – பெரிக்காத்தான் தலைவர் விளக்கம்!

top-news
FREE WEBSITE AD

ஏப்ரல் 13,

எதிர்கட்சித் தலைவரான  Datuk Seri Hamzah Zainudin பதவி விலகியது அவருடைய தனிப்பட்ட விருப்பம் என்றும் பெரிக்காத்தான் தலைமை அவரைப் பதவி விலகும்படி நிர்பந்திக்கவில்லை என்றும் பெரிக்காத்தான் தலைவரான Datuk Seri Dr Ahmad Samsuri Mokhtar விளக்கமளித்தார். பெர்சாத்துவின் துணைத் தலைவர் பொறுப்பிலிருந்து Datuk Seri Hamzah Zainudin நீக்கப்பட்டிருந்தாலும் அவர் எதிர்கட்சித் தலைவராக நீடித்தார். பெரிக்காத்தானில் ஏற்பட்ட புதிய தலைமை மாற்றத்தில் Datuk Seri Hamzah Zainudin பெரிக்காத்தானில் எந்தவொரு பொறுப்பையும் ஏற்கவில்லை என்பதால் எதிர்க்கட்சித் தலைவராக Datuk Seri Hamzah Zainudin நீடிக்க முடியாது என பெரிக்காத்தான் தலைவரும் திரங்கானு மெந்திரி பெசாருமான Datuk Seri Dr Ahmad Samsuri Mokhtar தெரிவித்தார். 

பெரிக்காத்தான் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மட்டுமே பெரிக்காத்தானின் துணைத் தலைவர்களாகப் பொறுப்பேற்க முடியும் என சட்டம் இருப்பதால் ஹம்சா தானாக் முன் வந்து எதிர்கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ததாக Datuk Seri Dr Ahmad Samsuri Mokhtar தெரிவித்தார். புதிய எதிர்க்கட்சித் தலைவர் பெரிக்காத்தான் கூட்டணிக் கட்சியின் தலைவராக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. பெரிக்காத்தான் தலைமை புதிய எதிர்கட்சித் தலைவரை விரைவில் அடையாளம் காணும் என Datuk Seri Dr Ahmad Samsuri Mokhtar தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *