அரசாங்கத்தின் மசோதா நிறைவேற்றபடவில்லை! அது எங்கள் பிரச்சனை இல்லை! எதிர்க்கட்சி பதில்!

top-news
FREE WEBSITE AD

மார்ச் 3,

மலேசியாவின் பிரதமருடைய பதவி காலம் 10 ஆண்டுகள் மட்டுமே இருக்க வேண்டும் என்கிற அரசாங்கத்தின் சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பில் தோல்வி அடைந்திருப்பதற்கும் எதிர்க்கட்சிக்கும் எந்தவொரு சம்மந்தமும் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் Datuk Seri Hamzah Zainudin தெரிவித்தார். அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் என மொத்தம் 154 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்களே சட்டத்திருத்தத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. பிறகு ஏன் எங்களைக் குறை சொல்ல வேண்டும் என Datuk Seri Hamzah Zainudin கேள்வி எழுப்பினார்.

எங்களுக்கு இது தேவையில்லாத வேலை. இது எங்கள் பிரச்சனையும் இல்லை. நாங்களா ஆட்சியில் இருக்கிறோம் என Datuk Seri Hamzah Zainudin மெத்தனமாகப் பதிலளித்தார். புதிய சட்டத்திருத்தம் குறித்து எங்களுக்கு விளக்கம் அளிக்கப்படவில்லை. நாங்கள் பல முறை இந்த சட்டத்திருத்தம் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருக்கிறோம். ஆனாலும் அரசு முறையான பதிலை வழங்கவில்லை என்பதால் நாங்கள் இந்த வாக்கெடுப்பிலிருந்து விலகி இருக்கிறோம் என Datuk Seri Hamzah Zainudin விளக்கமளித்தார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *