ஹம்சா சைனுடின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் தொடர்வது சரியா? – பெர்சத்து கேள்வி
- Surendran Sumdraraj
- 11 May, 2026
கோலாலம்பூர், மே 11-
பெர்சத்து கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பின்னரும் Datuk Seri Hamzah Zainuddin தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருப்பது குறித்து பெர்சத்து கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
பெர்சத்து தகவல் பிரிவு தலைவர் Datuk Tun Faisal Ismail Aziz வெளியிட்ட அறிக்கையில், லாருட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான ஹம்சா சைனுடின் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
இதற்கிடையில், நாடாளுமன்ற சபாநாயகர் Tan Sri Johari Abdul, ஹம்சா இதுவரை எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகும் கடிதத்தை சமர்ப்பிக்கவில்லை என்று ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த துன் பைசால், “தற்போது சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள ஒருவர் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்படுவது பொருத்தமல்ல. அந்தப் பதவி, எதிர்க்கட்சிகளில் மிகப்பெரிய கூட்டணியான பெரிகாத்தான் நேஷனலின் தெளிவான ஆதரவைப் பெற்ற உறுப்பினரிடம் இருக்க வேண்டும்,” என்றார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



