கோயில்களுக்கு நிதி வழங்குவதை அரசு நிறுத்த வேண்டும்! – மகாதீரின் முன்னாள் வழக்கறிஞர் கண்டனம்!
- THINAGAREN SANGGAREN
- 17 Feb, 2026
பிப்ரவரி 17,
கோயில்களுக்கு நிதி வழங்குவதை அரசு நிறுத்தினால் மட்டுமே புதிய கோயில்கள் உருவாகாது என மகாதீரின் முன்னாள் வழக்கறிஞரும் சட்டவிரோதக் கோயில்களுக்கு எதிரானக் கூட்டமைப்பின் தலைவருமான haniff khatri தெரிவித்துள்ளார். அரசு நிலங்களை ஆக்கிரமித்திருக்கும் கோயில்களுக்கு எதிராக நாங்கள் போராடுகிறோம். ஆனால் அரசாங்கம் அவர்களுக்கு நிதியை வழங்கி ஊக்குவிக்கிறது என haniff khatri குற்றம் சாட்டினார். தனியார் நிலத்தின் உரிமையாளரின் அனுமதியின்றி கட்டப்பட்டிருக்கும் கோயில்களுக்கு எதிராக நாங்கள் போராடுகிறோம் ஆனால் எங்களைக் காவல்துறை கைது செய்கிறது. உண்மையில் அரசு நிலத்திலும் தனியார் நிலத்திலும் கோயில்களைக் கட்டியவர்களைத் தானே காவல்துறை கைது செய்ய வேண்டும் என haniff khatri கேள்வி எழுப்பினார்,
தனியார் நிலத்திலும் அரசு நிலத்திலும் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருக்கும் கோயில்களுக்கு எதிராக நாங்கள் செயல்பட்டால். அரசு உடனடியாகத் தலையிடுகிறது. அவர்களுக்கு மாற்று நிலத்தையும் வழங்கி, கோயில் கட்டுவதற்கான நிதியையும் அரசு வழங்குகிறது என haniff khatri தெரிவித்தார். இதனால் எந்தவோர் அடிப்படை உரிமையும் இல்லாமல் கோயில்களைக் கட்டி, அது சர்ச்சையானதும் அரசு நிதியைப் பெற்றுக் கொண்டு இந்த கூட்டம் கோயில்களைக் கட்டுகிறது. முதலில் அரசாங்கம் கோயில்களுக்கு வழங்கும் நிதியை நிறுத்த வேண்டும். அந்த நிதியைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருக்கும் கோயில்களை அகற்ற வேண்டும் என மகாதீரின் முன்னாள் வழக்கறிஞரும் சட்டவிரோதக் கோயில்களுக்கு எதிரானக் கூட்டமைப்பின் தலைவருமான haniff khatri வலியுறுத்தினார்
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



