துன்பத்தை நீக்கும் சனிப்பிரதோஷம்!

top-news
FREE WEBSITE AD

சனிப்பிரதோஷம்:

சனிக்கிழமை வரும் பிரதோஷத்தை சனி பிரதோஷம் எனக் குறிப்பிடுவர்.இந்த நாளில் சிவாலயங்களில் வழிபாடுகளை மேற்கொள்ளும் வாய்ப்பு மிக முக்கியமாக கருதப்படுகிறது. சனி பிரதோஷத்தில் திருச்சிவாலயத்தை தரிசனம் செய்தால், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு தினமும் சிவாலயத்திற்கு சென்ற புண்ணியம் பெறும் என்று சிவனடியார்கள் கூறுவர்.

சாதாரண பிரதோஷ வழிபாடுகள் வழங்கும் பலன்களைவிட, சனி பிரதோஷம் எண்ணற்ற பலன் தரக்கூடியது. இந்த நாளில் ஈஸ்வரனை வணங்குவதோடு, சனீஸ்வரனையும் விரதம் இருந்து வழிபடுவதால் கூடுதல் நன்மைகள் கிடைக்கும்.

சனி பிரதோஷ நாளில், சிவாலயத்தில் "ஓம் நமச்சிவாய" மந்திரத்தை 108 முறைகள் சொல்லி வழிபடுவது நல்லது. இதன் மூலம் ஏழு பிறவிகளில் செய்த பாவங்கள் மற்றும் முன்னோர்களால் ஏற்பட்ட பாதகங்கள் நீங்கும்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *