மலேசிய விளையாட்டு வீரர்களின் நலனைப் பாதுகாப்பேன், அமைச்சர் ஹன்னா இயோ
- Tamil Malar (Reporter)
- 27 Sep, 2025
கோலாலம்பூர், செப். 27-
செய்தி-வெற்றி மைந்தன்
மலேசியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒவ்வொரு விளையாட்டு வீரரின்
நலனையும் பாதுகாப்பதற்கு தான் உறுதியளிப்பதாக இளைஞர், விளையாட்டு அமைச்சர் ஹன்னா இயோ தெரிவித்தார். இது,
ஏழு தேசிய கால்பந்து வீரர்கள் அனைத்துலக
கால்பந்து சம்மேளனத்தால் தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் வெளியிட்ட
அறிக்கையாகும்.
ஹன்னா தனது இன்ஸ்டாகிராம் பதிவில், இளைஞர், விளையாட்டு அமைச்சு பிபாவின்
இந்த முடிவை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்வதாகவும், மலேசிய
கால்பந்து சங்கத்திற்கு மேல்முறையீடு செய்யும் உரிமை இருப்பதாகவும்
வலியுறுத்தினார். ஆகவே இப்பொழுது எப்ஏஎம் சட்ட ரீதியான
மேல்முறையீட்டு செயல்முறையை முழுமையாக முடிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
இந்த விவகாரம் ஏழு வீரர்களை மட்டுமல்ல, முழு தேசிய அணியையும் பாதிக்கிறது என்று ஹன்னா சுட்டிக்காட்டினார். எனவே,
மலேசியாவின் நற்பெயரைக் காக்க, இந்த செயல்முறை
முழு ஒருமைப்பாடு, வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற வேண்டும்
என்று அவர் வலியுறுத்தினார். இந்த சம்பவம், மலேசிய கால்பந்து
அணியின் எதிர்கால போட்டிகளில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று கருதப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



