இஸ்லாம் அல்லாத HANNAH YEO கூட்டரசு அமைச்சரா? பெரிக்காத்தான் அதிருப்தி!

top-news
FREE WEBSITE AD

டிசம்பர் 17,

இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த HANNAH YEO பிரதமர் துறையின் கூட்டரசு வளாக அமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பது மலாய்க்காரர்களுக்கு மிக பெரிய இழப்பு என பெரிக்காத்தானின்  Padang Terap நாடாளுமன்ற உறுப்பினர் Ustaz Nurul Amin Hamid தெரிவித்துள்ளார். அமைச்சர்கள் துணை அமைச்சர்களாக டி.ஏ.பி கட்சியினர் ஆட்சியில் ஆதிக்கம் செலுத்தி வருவதால் இது மலாய்க்காரர்களின் உரிமைகளையும் அங்கீகாரங்களைக் கேள்விக்குறியாக்குவதாக Ustaz Nurul Amin Hamid தெரிவித்தார்.

வரலாற்றில் முதல் முறையாகக் கூட்டரசு வளாக அமைச்சராக இஸ்லாம் அல்லாதவர், மலாய்க்காரர் அல்லாதவர் நியமிக்கப்பட்டிருப்பது கவலை அளிக்கும் வகையில் இருப்பதாக Ustaz Nurul Amin Hamid தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடந்த சபா தேர்தலில் டி.ஏ.பி மோதமாகத் தோல்வி அடைந்தாலும் ஆட்சியில் டி.ஏ.பிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவது ஏன் என்றும் Ustaz Nurul Amin Hamid கேள்வி எழுப்பினார். மலாய்க்காரர்களே ஒன்றுப்படுவோம், டி.ஏ.பி இல்லாத ஒரு புதிய மலேசியாவை உருவாக்குவோம் என Ustaz Nurul Amin Hamid வெளியிட்டிருக்கும் கருத்து பல மலாய்க்காரர்களின் ஆதரவைப் பெற்று வருகிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *