உள்ளூர் அரிசி உற்பத்தி சவால் நீடிக்கிறது - அமைச்சர் முகமட் சாபு

top-news

கோலாலம்பூர், டிச. 16-

உள்ளூர் அரிசி உற்பத்தியை அதிகரிப்பதில் தொடர்ந்து சவால்கள் உள்ளதாக விவசாய, உணவுப் பாதுகாப்பு அமைச்சு (KPKM) ஒப்புக்கொண்டுள்ளது. வாடிக்கையாளர்களிடையே உள்ளூர் அரிசியின் கொள்முதல் விகிதம் மிகக் குறைவாகவே உள்ளது - வெறும் 10 முதல் 15 விழுக்காடு மட்டுமே.

அமைச்சர் டத்தோ ஸ்ரீ முகமட் சாபு (மாட் சாபு) கூறுகையில், BPT தொடர்பான விவகாரங்கள் நாடாளுமன்றத்தில் அடிக்கடி உரத்த குரலில் எழுப்பப்பட்டாலும், சந்தையில் உண்மையான தேவை அதுபோல் இல்லை என்றார்.

நுகர்வோரின் கொள்முதல் போக்கைப் பாதிக்கும் முக்கிய காரணங்களில் ஒன்று, இறக்குமதி அரிசியின் விலை குறைவு. இதனால் மக்கள் மலிவான விலையில் இறக்குமதி அரிசியையே தேர்வு செய்கின்றனர்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *