ரொனால்டோ மட்டுமே லட்சக்கணக்கான டாலர் சம்பளத்திற்குத் தகுதியான வெளிநாட்டு வீரர்: முன்னாள் சவுதி விளையாட்டுத்துறை அமைச்சர்
- Tamil Malar (Reporter)
- 28 Nov, 2025
செய்தி- வெற்றி மைந்தன்
ரியாத், நவ. 28-
சவுதி அரேபியாவின் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரும் இளவரசருமான அப்துல்லா பின் மொசாட், சவுதி புரோ லீக்கில் விளையாடும் வெளிநாட்டு வீரர்களில் கிரிஸ்டியானோ ரொனால்டோ மட்டுமே லட்சக்கணக்கான டாலர் சம்பளத்திற்குத் தகுதியானவர் என்று கூறியுள்ளார்.
2014 முதல் 2017 வரை அமைச்சராக பணியாற்றிய இளவரசர் அப்துல்லா, அந்நிய வீரர்களின் பெருமளவு வருகைக்குப் பிறகு லீக் முற்றிலும் மாறிவிட்டதாகத் தெரிவித்தார். அல் நஸர் அணியில் 2022 டிசம்பரில் இணைந்த போர்த்துகல் நட்சத்திரம் ரொனால்டோ, உலகளாவிய புகழையும் கவனத்தையும் லீக்கிற்கும் நாட்டிற்கும் தந்ததால் மட்டுமே அவருக்குக் கிடைக்கும் சம்பளம் நியாயம் என்றார்.
ரொனால்டோ ஆண்டுக்கு சுமார் 211 மில்லியன் டாலர் (தோராயமாக 871 மில்லியன் ரியால்) சம்பளம் பெறுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது வாரத்திற்கு ஏறத்தாழ 4 மில்லியன் டாலர் ஆகும்.
மற்ற வெளிநாட்டு வீரர்களுக்கு அதிக சம்பளம் வழங்குவது உள்ளூர் வீரர்களின் வளர்ச்சியை பாதிப்பதோடு, தேசிய அணியின் எதிர்காலத்தையும் ஆபத்தில் ஆழ்த்துவதாக அவர் எச்சரித்தார்.
2034-ல் சவுதி அரேபியா நடத்தவுள்ள உலகக் கோப்பைக்கு முன்னதாக, உள்ளூர் திறமைகளை பாதுகாக்கவும் போட்டித்தன்மையை உயர்த்தவும் உடனடி சீர்திருத்தங்கள் தேவை என்று அவர் வலியுறுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



